சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பரவலாக மழை பெய்தது.
சென்னையில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில், இரவு நேரத்தில் மழை பெய்தது. நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனிடையே, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.