நாகையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால், வேளாங்கண்ணியை அடுத்த தாண்டவமூர்த்தி காடு, காமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள், வேளாண்மை துறை மற்றும் தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post