தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை, ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இங்கு அதிகபட்சமாக 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இருப்பு பாதைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்நிலையில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சியோன் பகுதியில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். கனமழையின் காரணமாக எதிரே வந்த வாகனங்கள் ஓட்டுநருக்கு தெரியாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டாவில் தென்மேற்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post