மும்பையில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மும்பையின் தாராவி, பால்கர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பூமி குளிர்ந்து குளிர்ச்சி நிலவியது. மும்பையில் வெப்பநிலை 27 டிகிரி செல்சியசாக இருந்தது. இருந்தபோதிலும் காலையில் பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பையின் தாராவியில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பால்கர் பகுதியிலும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

Exit mobile version