குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் பாலங்கள் மூழ்கிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் இறுதிக்கட்டமாக குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குஜராத்தில் உள்ள வனக்போரி அணை நிரம்பியதை அடுத்து அதிலிருந்து நொடிக்கு 7 லட்சம் கன அடி நீர் மகிசாகர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கேடா நகரில் உள்ள சாலைப் பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்கிறது. பாதுகாப்புக் கருதி அந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post