தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

வட தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூரில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில், கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல், நாகை, எண்ணூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது திடீரென காற்றோடு கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பதாகும்.

Exit mobile version