இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் தர்மாசாலா, சிம்லா ஆகிய குளிர் பிரதேசங்களில், கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், மலைச் சிகரங்கள் பார்ப்பதற்கு ரம்மியாக காட்சியளிக்கிறது.
கொரோனா ஊரடங்கு தளர்வால், தர்மசாலா, சிம்லா ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, தர்மசாலாவில் உள்ள Bhagsu Nag என்ற இடத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மஞ்சி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பல வீடுகள், கார்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
மேலும், சாலையோரமாக இருந்த 10க்கும் மேற்பட்ட கடைகளும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.
Discussion about this post