மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துள்ள தொடர் மழையால், கருப்பாநதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள கருப்பாநதி அணையில் தொடர்மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியதுள்ளது. விரைவில் அணையிலிருந்து நீர் திறக்கப்பட உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post