திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் கோழிபண்ணை மற்றும், தென்னந்தோப்பு ஆகியவை முற்றிலும் சேதமடைந்தது.
தாராபுரம் பழனி ரோடு தாசநாயக்கன்பட்டி அடுத்து பொம்மநாயக்கன் வலசு கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடி மின்னல், சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை, தென்னந்தோப்பு மற்றும் முருங்கை தோட்டம் முற்றிலும் சேதமடைந்தது. கோழிப்பண்ணை மேலுள்ள மேற்கூரை சரிந்து விழுந்ததில் 100 கோழிகுஞ்சு மற்றும் கோழிகள் நசுங்கி உயிரிழந்தன. தெற்கு தோட்டம் பகுதியில் பல விவசாயிகள் பயிரிட்டிருந்த வெங்காயம் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post