வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த இரு நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது படிப்படியாகத் தீவிரமடைந்து கிழக்கு மத்திய அரபிக் கடலுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றுவீசும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, லட்சத்தீவு மற்றும் கர்நாடகாவில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Discussion about this post