வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், 7 மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ,தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post