கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கர்நாடகத்தில் கடலோரப்பகுதிகளான கார்வார், உடுப்பி, மங்களூர் மாவட்டங்களிலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஹசன், குடகு, சாமராஜநகர், மைசூர், மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாகப் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் பெங்களூர், கோலார் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் தமிழகத்துக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
Discussion about this post