தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழை பெய்யும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 48 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல்பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், அடுத்த 36 மணிநேரத்தில் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, புயல் சின்னமாக உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி புயல் சின்னம் நகருவதால், வரும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் சுமார் ஒருவார காலத்திற்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version