ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் சூளகிரி, பாகலூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த ஐந்து நாட்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் மழையால் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான முழையூர், உலுப்பகுடி, காட்டு வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், திடிரென பெய்த கனமழையால், அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version