சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்து இருந்தது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம்,சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சென்ட்ரல், கீழ்ப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், பல பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.