மதுரை மாவட்டம் மேலூர், தும்பைப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில், நேற்று மாலை, ஒன்றை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில இடங்களில் எண்ணெய்வித்து பயிர்கள் பயிரிடப்பட்ட நிலையில், அவற்றிற்கு உகந்ததாக இந்த மழை பெய்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Discussion about this post