விருதுநகரை அடுத்த சாத்தூரில் இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
தமிழகத்தில் தற்போது கத்தரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், உள் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில், இன்று பலத்த காற்றோடு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. இப்பகுதியில், கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையின் காரணமாக அப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று அவ்வப்போது மழை பெய்து வந்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
Discussion about this post