கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்லடா அணை, 15 நாட்களாக நிரம்பி வழிந்து வருவதால் 4 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழையால் கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கொல்லம் மாவட்டத்தின் தென்மலையில் உள்ள கல்லடா அணை கடந்த 5 ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டி, மறுகால் விழத் தொடங்கியது. தொடர்ந்து மழைப்பொழிவு உள்ளதால் கடந்த 15 நாட்களாக அணையில் இருந்து நீர் வழிந்து வருகிறது. இந்த அணையின் நீர் கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழை, பத்தினம்திட்டா உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post