கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது, கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டின் கோடை வெப்பம் அதிகமாக காணப்பட்டது, இதனால் மக்கள் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க கோடை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம், சுசீந்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பகலிலும் இந்த மழை நீடித்தது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post