கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே, திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நான்கு பகுதிகளில் மூன்று பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post