சபரிமலையில் மகரவிளக்கு பூஜையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலின் மகரவிளக்கு பூஜை நாளை மாலை நடைபெறுவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சபரிமலையில் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை நாளை மாலை 6.35 மணிக்கு நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை காண பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்வது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. நவீன கண்காணிப்பு கேமிராக்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 19-ந்தேதி இரவு வரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.

Exit mobile version