கர்ப்பிணிப் பெண்ணுக்கு பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வின்போது நடந்த ஓட்டப்பந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வின்போது, கர்ப்பிணிப் பெண் தேவிகா, ஓட்டப்பந்தயத்தில் 30 நொடி தாமதமாக வந்ததாக கூறி விலக்கப்பட்டார். இதை எதிர்த்து தேவிகா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது, இது தொடர்பாக 2003 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கர்ப்பிணி பெண், தொடர்பான மருத்துவ சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பிரசவத்துக்கு பிறகு தனியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுதாரரை இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு தேர்வு செய்ய உத்தரவிட்டார்.

Exit mobile version