மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை நிறுத்தியிருக்கிறதா திமுக?

உலகில் உயிர்கள் ஜனித்திருப்பதற்கு அன்பு என்ற ஒற்றைச் சொல்லேக் காரணம். அந்த அன்பு எனும் ஒற்றைச் சொல்லை தாயைத் தவிர யாரால் நமக்கு தர முடியும். அப்படிப்பட்ட தாயையும் சேயையும் காக்கும் பல நல்லத் திட்டங்களை அதிமுக ஆட்சிகாலத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களுக்கு அளித்திருந்தார். அதனை அடுத்து வந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அம்மா வழியில் தாய்-சேய்களுக்கான திட்டங்களையும், கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டங்களையும் சீரும் சிறப்புமாக கொண்டு சென்றார்.

திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மகப்பேறு உதவித் திட்டம்..!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சமூகநீதி, பெண்ணியம் என்று பேச மட்டுமே செய்கிறார்களே தவிர, எந்தவொரு களச் செயல்பாடும் இல்லை. அதாவது இந்த ஆட்சியில் கர்ப்பிணியருக்கான மகப்பேறு நிதியுதவி இரண்டு ஆண்டுகளாக கிடைக்காததால் அத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்று சந்தேகம் தற்சமயம் எழுந்துள்ளது.

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பெயரில் மகப்பேறு உதவித் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பமுற்ற பெண்களுக்கு 18,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஆனால், இந்த நிதி இரண்டு ஆண்டுகளாக கிடைப்பதில்லை என, கர்ப்பிணியர் குற்றம் சாட்டி வருகின்றனர். முன்பு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு பெட்டகம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதில் உள்ள சில பொருட்களும் காலவதியான நிலையில் உள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பிரசவித்தப் பெண் கூறியதாவது!

முத்துலட்சுமி அம்மையார் நிதியுதவித் திட்டத்தில், முதல் தவணையை மத்திய அரசு வழங்குகிறது. அது தாமதமாவதால், மாநில அரசின் நிதியுதவியும் தாமதமாவதாக கூறுகின்றனர். எனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆகிறது. பரிசோதனை முதல் பிரசவம் வரை அரசு மருத்துவமனைகளில் தான் பார்த்தோம். அதேபோல், குழந்தைக்கான தடுப்பூசியும் அரசு மருத்துவமனையில் தான் போடப்படுகிறது. என்னுடன் பிரசவித்த யாருக்குமே, நிதியுதவி வழங்கப்படவில்லை. செவியலர்களைக் கேட்டால், “நிதியுதவி அளிப்பதில் இரண்டு ஆண்டுகளாக சிக்கல் உள்ளது” என கூறுகின்றனர். எனவே, கர்ப்பிணியருக்கான நிதியுதவி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இவ்வாறு அப்பெண் கூறினார்.

இதுகுறித்து, மக்கள் நலவாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இணையதளத்தில் சில தகவல்கள் மாறுபட்டால், நிதியுதவி கிடைக்காமல் இருக்கலாம். அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை முன்கூட்டியே அறிந்து செயல்பட வேண்டியது அரசின் கடமை. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசு எந்திரமானது பழுதடைந்துவிட்டது. ஒவ்வொரு விசயத்திலும் அலட்சியம் காட்டும் விடியா அரசை மக்கள் அரியாசனத்தில் இருந்து இறக்கும் காலம் வெகு சீக்கிரத்தில் உள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் கூற்று.

Exit mobile version