ட்வீட்டரில் மோதிக் கொள்ளும் பாண்டியா சகோரர்கள்

கிரிக்கெட் வீரர்கள் பாண்டியா சகோதரர்களின் வேடிக்கையான ட்வீட்டர் மோதல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தர்மசாலாவில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஹர்த்திக் பாண்டியா, குருணால் பாண்டியா விளையாடுகிறார்கள். முதல் டி20 போட்டி செப்டம்பர் 15 தேதி தொடங்குகிறது. உலகக் கோப்பை தொடருக்கு பிறகு முதல் முறையாக ஹர்த்திக் பாண்டியா விளையாட உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய பும்ராவுக்கு ஓய்வுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா தொடருக்கு தயார் ஆகும் வகையில் ஹார்டிக் பாண்டியா மற்றும் குருணால் பாண்ட்யா ஆகிய இருவரும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஹர்த்திக் பாண்டியா ட்வீட்டரில் வெயிட்டுள்ள வீடியோவில், வலை பயிற்சியின்போது குருணால் பாண்டியா வீசிய பந்தை தலைக்கு நேராக தூக்கி அடித்து நொறுக்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை சர்வ சாதரணமாக வானத்தை நோக்கி பறக்க விடுகிறார். அப்போது, “Pandya vs Pandya in training” என்று குறிப்பிட்டு, நான் எனது பெரிய சகோதரரை வென்றதாக நினைக்கிறேன் என்றும் உங்கள் தலையை நோக்கி பந்தை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

ஹர்த்திக் பாண்டியாவின் ட்வீட்டர் வீடியோவுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் குருணால் பாண்டியாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஹர்த்திக் பாண்டியா பந்தை அடிக்காமல் மிஸ் செய்கிறார். அப்போது, ஏன் இந்த வீடியோவை மட்டும் பதிவேற்றாமல் போனீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், பாண்டியா சகோதரர்களின் இந்த வேடிக்கையான ட்வீட்டர் மோதல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version