ஹரியானாவை சேர்ந்த பெண். தன் கணவன் குடிபோதையில் தொல்லை தந்ததால், அவரை கொன்று விட்டதாக கடிதம் ஒன்றை எழுதி உள்துறை அமைச்சர் அனில் விஜுவிடம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதியை சேர்ந்தவர் சுனில்குமாரி. இவரது கணவர் ரோஹ்தாஸ் சிங் காவல்துறை துணை எஸ்.பியாக வேலை பார்த்து வந்தார். கணவர் ரோஹ்தாஸ் கடந்த 2017ஆம் ஆண்டு குடிபோதையில் மயங்கி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டு வந்தனர். இந்த நிலையில் குடிபோதையில் தொல்லை கொடுத்ததால் தன் கணவரை கொன்றுவிட்டதாக கூறி சுனில்குமாரி, மத்திய உள்துறை அமைச்சர் அனில் விஜுவிடம் கடிதம் ஒன்றை கூடுத்தார். அதில், தன் கணவரை கொலை செய்து அதை மறைத்து வந்ததாகவும், ஆனால் குற்ற உணர்ச்சியால் அவதிபட்டுவருவதாகவும் தெரிவித்தார். தன்கணவரை கொலை செய்த குற்றத்திற்கு என்னை தூக்கிலிடுங்கள் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதையடுத்து, சுனில்குமாரியை கைது செய்த மகேஷ்நகர் காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Discussion about this post