வாகனங்களை ஒப்படைக்கும் பணி 3 வது நாளாக நடந்து வருகிறது!

ஊரடங்கில் வீதி முறைகளை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி 3 வது நாளாக நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 19ம் தேதி முதல் நேற்று வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், கடந்த 17 நாட்களில் ஊரடங்கை மீறி அவசியமின்றி வெளியே சுற்றிய 88 ஆயிரத்து 360 வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்கும் பணியில் 3 வது நாளாக காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தேதி வாரியாக வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு தகவலளிக்கப்பட்டு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. உரிமையாளர்கள் ஆவணங்களோடு வந்து வாகனத்தை பெற்று செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version