ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு, டைனோசர் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு வெள்ளை மாளிகை வந்த சிறுவர்களுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் சாக்லேட்களை வழங்கினார்.
அகால மரணமடைவோர், தங்களது விருப்பம் நிறைவேறும் வரை இந்த உலகிலேயே சுற்றித் திரிவதாக மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. அந்த வகையில், பேய்யாக சுற்றித்திரியும் ஆவிகள் தங்களுக்கு கெட்டது செய்யக்கூடாது என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அக்டோபர் 31ம் தேதி ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஹாலோவீன் திருவிழாவில் ஏராளமான குழந்தைகள் டைனோசர், சூப்பர் ஹீரோஸ் உள்ளிட்ட வேடமணிந்து வந்தனர். அவர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் சிறுவர்களுக்கு சாக்லேட்களை வழங்கி குழந்தைகளை வரவேற்றனர்.