தீவிரவாதிகள் -பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல்களை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் புத்காம் மாவட்டத்தின் கிரால்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்வதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Exit mobile version