குலாப் புயல் : கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

குலாப் புயல் எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது.

குலாப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே கலிங்கப்பட்டினம் அருகே 26 தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலூர் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

 

இதனிடையே, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version