மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பதை அடுத்து அந்த வாகனங்களின் விலை பெருமளவு குறைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 12 சதவீதமாக இருந்த மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்களின் ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மகேந்திரா, டாடா ஆகிய நிறுவனங்கள் தங்கள் மின்சார கார்களுக்கான விலையை 80 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளன.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா மின்சார காரின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.