ஜிஎஸ்டி கவுன்சிலின் 35வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த முடிவுகளை, அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதிகளாக கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்து வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெறும். அந்த வகையில், 35வது ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம், இன்று டெல்லியில் நடைபெறுகிறது. மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்குப் பிறகு, முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்க உள்ளார்.
Discussion about this post