ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பிரதமராக 30-ம் தேதி இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அதைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிதியமைச்சர் பதவியேற்ற பின்னர், ஜூன் முதன் வாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூரியசக்தி திட்டங்களுக்கான வரிமுறைகளை ஏற்படுத்துவது, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற லாட்டரிகளுக்கு ஒருங்கிணைந்த வரி விதிப்பது போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசுகள் விடுத்துள்ள கோரிக்கையின்படி வரிக்குறைப்பு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
Discussion about this post