நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சரக்கு, சேவை வரி 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சராக கூடுதல் பொறுப்பை கவனித்து வரும் பியூஷ் கோயல் நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் அதன் முன்னோட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நடுத்தர, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையிலும் வருவாய் உயர்ந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
நடப்பாண்டில் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 94 ஆயிரத்து 725 கோடியும், 2018 ஜனவரி மாதம் 89 ஆயிரத்து 825 கோடியும் ஜி.எஸ்.டி மூலம் வருமானம் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.