தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்று தேர்வெழுதினர். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையர், உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்- 2 தேர்வு இன்று நடைபெற்றது.
காலியாக உள்ள ஆயிரத்து 199 பணியிடங்களுக்கு, மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆண்கள் 3 லட்சத்து 54 ஆயிரத்து 245 பேரும், பெண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 268 மையங்களிலும், சென்னையில் 248 மையங்களிலும் இந்த எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
Discussion about this post