குரூப் 4 தேர்வு பயிற்சி மையங்களை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என, நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமை செயலகத்தில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகிகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளருடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப் – 4 தேர்வு முறைகேடுகள் குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரு மையத்தில் நடந்த முறைகேட்டை வைத்து குரூப் 4 தேர்வை ரத்து செய்ய சொல்வது நியாமாக இருக்காது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார். பயிற்சி மையங்களை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Exit mobile version