சென்னை நகரை தூய்மையான பசுமையான நகரமாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பெசன்ட்நகரில் மூன்றாவது ஆண்டாக கிரீன் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
போட்டியை தமிழக பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பிரதீப் ஃபிலிப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
5 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 21 கிலோமீட்டர் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதில் திரைப்பட நடிகை ரித்திகா,பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை டிஜிட்டல் அதிகாரி சாமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.