இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்புக்காக மத்திய அரசு சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது என்ற புதிய விருதை அறிவித்துள்ளது. நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த விருது கருதப்படும் எனவும் இந்த விருது தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு சர்தார் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து குடிமக்களும், மதம், இன சாதி, பாலினம், பிறந்த இடம், வயது அல்லது தொழில் வேறுபாடு இல்லாமல் விருதுக்கு தகுதியுடையவர்கள் எனவும் அறிவிக்கப்பட உள்ளது.