கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வரும் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகத்தில் வைக்க தமிழக அரசு முனைப்போடு உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க கட்டிடத்தில், மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் தமிழ்கூடல் தொடக்க விழா நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு நடத்த அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
நான்காவது கட்ட ஆய்வில் கிடைத்த பொருட்கள் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பது அறிவதற்காக, அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பி உள்ளதாகத் தெரிவித்த அவர், கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை வரும் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகத்தில் வைக்க அரசு முனைப்புடன் உள்ளதாகவும் கூறினார்.