முழு நேரப்பணியாளர்கள் பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இது நியாயமானது அல்ல என்று சர்ச்சையாக சட்டமன்றத்தில் பேசியுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அரசுப் பணியில் சேர்ந்ததும் யாரும் அதிக சம்பளம் வாங்குவதில்லை. அரசு ஊழியர்களில் 1 விழுக்காட்டினர் மட்டுமே லட்சக் கணக்கில் சம்பளம் வாங்குவதை அனைவரும் வாங்குவது போல அமைச்சர் சித்தரித்து பேசியிருக்கிறார். இது தங்களின் மீதனா வெறுப்பினைக் காட்டுகிறது. மேலும் இது எங்களுடைய இருக்கு சுமூக உறவினை பாதிக்கும் செயலாக உள்ளது. அமைச்சர் எங்களை சுகபோகிகளாக சித்தரித்து பேசியிருப்பது சரியல்ல என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.