பெரம்பலூர் அருகே தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியில் வசதிகள் செய்யப்பட்டிருப்பதால் பெற்றோர்கள் போட்டி போட்டு தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியானது இந்த வருடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு முதல் ஆண்டிலேயே LKG யில் 60 மாணவர்களும் UKG யில் 30 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் அனைவரையும் கவர்வதாக உள்ளன. மழலை செல்வங்கள் அமரும் வகையில் வண்ணமிகு நாற்காலிகள், கட்டிடங்களின் வெளிப்புற சுவற்றில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர். LKG மற்றும் UKG மாணவர்களுக்கான புதிய கட்டிடத்தை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.