அரசுப்பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகளை Android App செயலியை பயன்படுத்தி கண்காணிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல் திறன், வகுப்பறை மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களின் செயல்பாடை Android App மூலம் கல்வி அலுவலர்கள் மதிப்பீடு செய்து, இயக்குநரகத்துக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். பள்ளிகளைக் கண்காணிக்க வரும் ஆசிரியர்கள், பதிவேடுகளை எடுத்து வராமல், ஆப் மூலம் கண்காணித்து மாணவர்களின் கருத்துகளைக் கேட்டு ஆசிரியர்களின் செயல்பாடை மதிப்பீடு செய்வார்கள்.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.