நீலகிரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மண் சரிந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள 15 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மணல் மூட்டைகளுடன், ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.