National Payments corparation of India இன்று ஒரு தகவலை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளது. ஏப்ரல் ஒன்று முதல் யுபிஐ வாலட்களைப் பயன்படுத்தி 2000 ரூபாயிலிருந்தோ அல்லது அதற்கு அதிகமாகவோ வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தினால் 1.1 சதவீதம் வரியானது வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவும் பணத்தினை அனுப்புபவர்களுக்கு வரியானது வசூலிக்கப்பட மாட்டாது, மாறாக பணத்தினைப் பெறும் வணிகர்களிடமிருந்து இந்த வரியானது வசூலிக்கப்படும். இதுவே வங்கி கணக்கில் இருந்து வணிகரின் வங்கி கணக்கு தொகையினை மாற்றினால் எந்தவித வரியும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்தும்போது வரியானது வசூலிக்கப்படமாட்டாது.
இந்த தற்போது யுபிஐ வாலட் ஐடிகளைப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இந்த செய்தி ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது வியாபாரிகளுக்குத் தான் பேரதிர்ச்சி. ஒருவேளை வியாபாரிகள் இதன்மூலம் விற்கும் பொருட்களுக்கு அதிகவிலையினை விதிக்கக் கூடும் அல்லது பணத்தினை காகிதமாகவே வாங்கும் சூழலும் ஏற்படலாம்.
இந்நிலையில் பேடிஎம் தனது டிவிட்டர் தளத்தில்,
“யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிக் கணக்கு வாயிலாகவோ, வாலட் வாயிலாகவோ பணம் செலுத்தும்போது எந்தவொரு வாடிக்கையாளரும் கட்டணம் செலுத்த தேவை இல்லை. பொய் தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். மொபைல் பரிவர்த்தனைகள் நம் பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கும்”
Regarding NPCI circular on interchange fees & wallet interoperability, no customer will pay any charges on making payments from #UPI either from bank account or PPI/Paytm Wallet. Please do not spread misinformation. #Mobile payments will continue to drive our economy forward!
— Paytm Payments Bank (@PaytmBank) March 29, 2023
என்று ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை மூலம் ஓரளவு கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கும் சில வருமானங்கள் கிடைக்கப் பெறும் என்று நம்பப்படுகிறது.