கூகுள் பயனாளர்களை அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் வேவு: ஆய்வில் திடுக்கிடும் தகவல்

நாம் அனைவருமே தற்போது அதிகமாக பயன்படுத்துவது கூகுள் தான். எந்த ஒரு விவரமாக இருந்தாலும் கூகுளில் தான் சேமித்து வைத்துக் கொள்கிறோம்.அது பாதுகாப்பானது என்று நாம் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், தற்போது கூகுள் பயனாளர்களை அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் வேவு பார்க்கின்றனர் என்று ஆய்வறிக்கையில் கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுளின் ‘அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு’ (Threat analysis group) நடத்திய ஆய்வில் சுமார் 149 நாடுகளில் 12,000 க்கும் மேற்பட்ட கூகுள் பயனாளர்களை அரசு ஆதரவுடன் வேவு பார்த்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை 1000 க்கும் மேற்பட்ட கூகுள் பயனாளர்களின் கணக்குகள் வேவுபார்க்க பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 500க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட பயனாளர்களின் கூகுள் நடவடிக்கைகளை அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் வேவு பார்த்து வருகின்றனர் என இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கூகுள் பயனாளர்களை இந்திய அரசு வேவு பார்ப்பதில் அவ்வளவு மோசமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேவு பார்ப்பவர்களின் பட்டியலில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் குறி வைக்கப்பட்டு உள்ளனர் என தெரியவந்துள்ளது.

Exit mobile version