அதிமுக கொடுக்கும் கட்சி என்றும், திமுக அதை தடுக்கும் கட்சி என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள ராஜாளிப்பட்டி, நம்பம்பட்டி, தேன்கனியூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில், கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை வாக்கு சேகரித்தார். அவருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொங்கலுக்கு அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பணம், விலையில்லா கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, தாலிக்கு தங்கம், படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி போன்ற பல திட்டங்களை கொடுப்பது அதிமுக அரசு என்றார். ஆனால் அதை தடுக்கின்ற கட்சி தி.மு.க கட்சி என்று கூறினார்.
Discussion about this post