புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அறிமுக கூட்டம் வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுக கூட்டணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றும், 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post