சின்னத்தம்பி யானை விவகாரத்தில் வரும் 11-ம் தேதி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் சர்க்கரை மில் பகுதியில் 6 நாட்களாக முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். யானையின் செயல்பாடுகள், உடல்நலம் ஆகியவை குறித்தும் யானையால் சர்க்கரை ஆலை தொழிலாளர் குடியிருப்பில் சேதம் அடைந்தது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக அமைச்சர் நின்றிருந்த இடத்திற்கே சின்னத்தம்பி யானை வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 66 பேர் மூன்று குழுக்களாக சின்னத்தம்பி யானையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post