தங்கமே தங்கமே கடத்தல் தங்கமே! இந்தியாவில் 3 ஆண்டில் 9,436 கிலோ தங்கம் பறிமுதல்!

தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்ட 9ஆயிரத்து 436 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கக்கடத்தல் குறித்து புள்ளிவிவரத் தொகுப்பினை காண்போம்…

இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்வதில் அன்னிய செலாவணி பெருமளவில் ஈட்டப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் இறக்குமதி செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதே நேரத்தில், தங்கத்தின் சந்தை மதிப்பு காரணமாக, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வரி ஏய்ப்பு செய்து தங்கத்தை கடத்தி வருவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மியான்மர் மற்றும் வங்கதேசம் வழியாக அதிக அளவிலும், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து 20 சதவீதம் அளவுக்கும் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2020-ஆம் ஆண்டில் கடத்தி வரப்பட்ட 375 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 676 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல 2021ஆம் ஆண்டு 322 புள்ளி 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு 888 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 519 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2023 -ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 101 புள்ளி13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 3 வருடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 2020 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 567 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 ஆயிரத்து154 புள்ளி 58 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில், 2 ஆயிரத்து 383 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு 2 ஆயிரத்து 445 வழக்குகள் பதிவாகி உள்ளது.

அதுவே 2022 ஆம் ஆண்டில், 3 ஆயிரத்து 982 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 502 புள்ளி 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 875 வழக்குகளில், 917 புள்ளி 37 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ((GFX 02 OUT))

வருவாய் புலனாய்வுத்துறையின் அறிக்கையின் படி கடந்த 2020 ஜனவரி முதல் 2023 பிப்ரவரி வரை தமிழகத்தில் 2 ஆயிரத்து 237 தங்கக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆயிரத்து 317 கிலோ தங்க பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்திய அளவில் 9 ஆயிரத்து 869 வழக்குகளில் 9 ஆயிரத்து 436 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிக அளவில் தமிழகத்திற்கு கடத்தி வருவது வருவாய் புலனாய்வு துறை அறிக்கைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.

– ராம்குமார் மற்றும் ஆசாத்.

 

Exit mobile version