75 பிஞ்சு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தினை பரிசாக வழங்கினார் பொதுச்செயலாளர்..!

அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பாக புரட்சித் தலைவர் அம்மா அவர்களின் 75 வது பிறந்தநாளினை ஒட்டி 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தினை பரிசாக வழங்கினார் பொதுச்செயலாளர் அவர்கள். புரட்சித் தலைவி அவர்களின் பிறந்தநாள் அன்று பிறந்த 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தினை வழங்கி வாழ்த்தினார். பிறகு தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த பெண்களுக்கான முக்கியத் திட்டங்களைப் பற்றி உரையாற்றினார். திருமண உதவித்தொகையை  அம்மா கொண்டுவந்தார். ஆனால் இந்த விடியா திமுக அரசு அத்திட்டத்தை நிறுத்திவிட்டது. ஏழைமாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை புரட்சித் தலைவி கொண்டுவந்தார். அதையும் விடியா அரசு நிறுத்திவிட்டது. அதேபோல் ஏழை சகோதரிகளுக்காக 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நம்மால் துவங்கப்பட்டது. அதையும் திமுக நிறுத்திவிட்டது. அதேபோல அம்மா மினிக்ளினிக் போன்ற பல்வேறு அதிமுக திட்டங்களை திமுக அரசு மூடுவிழா செய்துவிட்டது. உண்மையான பெண்களுக்கான அரசாக அதிமுகவே இருந்தது என்று கூறினார்.

Exit mobile version