தங்கம் விலை இதுவரையில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில், ஆபரண தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 25 ஆயிரத்து 840 ரூபாயிக்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது.அதனடிப்படையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 25 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 377 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து, 44 ரூபாய்க்கும், கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரம் ரூபாயிக்கும் விற்பனை செய்யப்படுகிறது
Discussion about this post